முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இன்று காலை முதல் அவர் தலைமை செயலகம் சென்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். முன்னதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்ற நலம் விசாரித்தார். உடல்நலம் குறித்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் முதல்வரிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினார்.
இந்த சந்திப்பில் முதல்வரின் துணைவியார் துர்க்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் எ.வ. வேலு தேமுதிக சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் சில நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனாலும் இந்த சந்திப்பை அரசியல் நகர்வாக பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.