Skip to content

கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த் இன்று  காலை  முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்று சந்தித்து  முதல்வரிடம் உடல் நலம் குறித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது  சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோரும்  உடனிருந்தனர். சந்திப்பு முடிந்து  கோயம்பேட்டில் உள்ள  தேமுதிக தலைமையகத்திற்கு வந்த பிரேமலதாவை  பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது பிரமேலதா கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் விசாரிக்க நானும், எங்கள் கட்சி நிர்வாகிகளும் சென்றோம்.  உடல் நலம் குறித்து கேட்டோம்.  உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள் என்று கூறினோம்.  இந்த சந்திப்பின்போது  100 சதவீதம் அரசியல்  ரீதியான சந்திப்பு இல்லை.   நட்புரீதாக  முதல்வரின் உடலம் நலம் குறித்து மட்டுமே பேசினோம். இந்த சந்திப்பு எங்கள் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான்.

கட்சியை வளர்ச்சி ஆகஸ்ட் 3ம் தேதி முதல் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம்.  வீடு வீடாக சென்று மக்களை  சந்திக்க இருக்கிறோம்.  கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. ஜனவரியில் கடலுரில் எங்கள் கட்சியின்  மாநாடு நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

error: Content is protected !!