Skip to content

நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்..பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டு மக்களின் சேமிப்பு திருவிழாவாக இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்படும் என அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய ஜிஎஸ்டி நாளை முதல் அமலுக்கு வருவதால் பல பொருள்களின் விலை குறையவுள்ளது. இதன் பலன்கள் குறித்து மோடி எடுத்துரைத்து வருகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பெண்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள், ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மூலம் மக்கள் குறைந்த செலவில் விருப்பமானதை வாங்க முடியும்.

நவராத்திரி தொடக்க நாளில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டு மக்களின் சேமிப்பு திருவிழாவாக இருக்கும். ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கானோரின் கனவு ஜி.எஸ்.டி. வரி மூலம் நனவானது. இது இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகும். இதைப்போல இனி வரும் ஜி.எஸ்.டி. 2.0-வும் முக்கியமானது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும்.

துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அவர்களை புதிய நடுத்தர வர்க்கம் என்ற அர்த்தத்தில் ‘நியோ மிடில் கிளாஸ்’ என்றார். இவர்கள் தங்களுக்கென லட்சியங்களையும் கனவுகளையும் கொண்டுள்ளனர் என்ற அவர், வருமான வரிவிலக்கு வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தியது, நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இதனால் வாழ்க்கை எளிதாகவும் வசதியாகவும் மாறும்” என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!