தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளசுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் இணைக் கோயிலான வெள்ளை விநாயகர் கோவிலில் அர்ச்சகர் விஸ்வநாதஐயர், (75) என்பவர் பணியாற்றி வருகிறார் .
கடந்த மாதம் 8ம் தேதி பாபநாசம் மெலட்டூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது குடும்பத்துடன் கோயிலுக்கு வந்துள்ளார் . அப்போது உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக சிறுமி தனியாக சென்றபோது
இக்கோயில் அர்ச்சகர் விஸ்வநாத ஐயர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் .
தாரது மகள் உண்டியலில் காணிக்கை செலுத்த போய் வெகு நேரம் ஆகியும் வரவில்லையே என பெற்றோர்கள் கோவிலுக்குள் சென்று உள்ளனர் அப்போது சிறுமி அழுது கொண்டே வெளியே வந்துள்ளார் ஏன் அழுகிறாய் என கேட்டபோது மார்பு பகுதி உட்காரும் இடம் வழிப்பதாக பெற்றோர்களிடம் தெரிவிக்கவே.
பெற்றோர்கள் உடனடியாக திருக்கோவில் நிர்வாகத்திடமும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அர்ச்சகர் விஸ்வநாதன் மீது போஸ்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர் .
கடவுள்.காப்பாற்றுவார் நல்லதே நடக்கும் என நம்பி மக்கள் கோவிலுக்கு சென்றால் அங்கும் இது போன்ற பாலியல் சீண்டல்கள்செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். இச்சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளது குழந்தையின் பெற்றோர்கள் கோவில் நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை தாமதமாகவே எடுத்து இருக்கின்றனர் மேலும் அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.