Skip to content

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை நாட்டு மக்களுடன் கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் காலை 7.30 மணியளவில் செங்கோட்டையில் ‘புதிய பாரதம்’ என்னும் கருப்பொருளுடன் சுதந்திர தின விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவுக்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை, பாதுகப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சே, செயலாளர் ரஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்றனர்.   Image

தொடர்ந்து  காவலர்கள் மற்றும் ராணுவத்தினரிடன் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  3 படைகள் மற்றும் டெல்லி காவல்துறை என 4 பிரிவுகளில் இருந்த அணிவகுப்பு மரியாதையை இந்திய விமானப்படை தலைமை தாங்கியது.  அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்குச் சென்று 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது.  அதில் ஒரு ஹெலிகாப்டரில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும்  பொருத்தப்பட்டிருந்தது.  இதன் தொடர்ச்சியாக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. தேசியக் கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

error: Content is protected !!