Skip to content

இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள நிலைமை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். இதன் போது, ​​பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை விரைவுபடுத்துவதோடு, பல முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

இந்தப் பயணத்தின் போது, அவர் ஹெலிகாப்டரில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழி ஆய்வு செய்தார்ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். பிரதமர் மோடி முதலில் கங்கரா சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 366 பேர் உயிரிழந்துள்ளனர், ரூ.4,080 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், பஞ்சாபின் குர்தாஸ்பூர் (Gurdaspur) மாவட்டத்திற்கு சென்று, மதியம் 3 மணியளவில் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அங்கு அதிகாரிகளுடன் சந்தித்து, தேசிய பேரிடர் மீட்புக் குழு (NDRF), மாநில பேரிடர் மீட்புக் குழு (SDRF) உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்நிலையில், இமாச்சலத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!