Skip to content

27 அடி சுவரைத் தாண்டி தப்பிய கைதிகள்: ராஜஸ்தான் சிறையில் நள்ளிரவில் நடந்த சம்பவம்

ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தப்பி செல்ல முடியாதபடி, சிறையை சுற்றி 27 அடி உயரத்திற்கு சுவர் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, கைதிகள் தப்பி சென்றாலும் அவர்கள் சிக்கி கொள்ளும் வகையில், அந்த சுவருக்கு மேல் உயரழுத்த மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. கைதிகளை கண்காணிக்க 18 சிறை காவலர்களும் உள்ளனர். சிறையில், ஜெய்ப்பூரை சேர்ந்தவர்களான நேவல் கிஷோர் மஹவார் மற்றும் அனாஸ் குமார் ஆகிய 2 பேர் கைதிகளாக உள்ளனர். நண்பர்களான இவர்கள் கூட்டாக சேர்ந்து திருடுவதை வழக்கமாக கொண்டவர்கள்.

இந்நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அவர்கள் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவத்தன்று இரவு சிறை அதிகாரிகள் சற்று அசந்திருந்தபோது, இருவரும் சிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்தனர். அதன்படி 18 அடி உயர ரப்பர் குழாயின் உதவியை கொண்டு அவர்கள் இருவரும் 27 அடி சுவரில் ஏறி உயரழுத்த மின்சார கம்பி மீது தாவி குதித்து தப்பினர். சிறையில் ஒன்றரை மணிநேரம் சுற்றிய அவர்கள் ஒரு வழியாக சிறையில் இருந்து வெளியேறும் வழியை கண்டறிந்து தப்பி சென்றனர். அவர்களை தேடி பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.  இதில், நேற்று மாலை போலீசாரால் அனாஸ் கைது செய்யப்பட்டார். மற்ற நபரை தேடும் பணி தொடருகிறது.

இந்த சம்பவத்தில், 2 பெண் உள்பட 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதற்கு முன்பு அருகே இருந்த பெண்கள் சிறை சுவரை பயன்படுத்தி தப்ப முயன்றனர். ஆனால், போர்வை சேதமடைந்து அவர்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. 2-வது முறை அவர்கள் முயன்று சிறையில் இருந்து தப்பினர்.

 

error: Content is protected !!