புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (11.03.2023)
வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) இர.தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு இன்று (10.03.2023) விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தினை முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் முன்னிலையில் காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.நா.கவிதப்பிரியா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.