உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இதையொட்டி புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று ஜனாதிபதி மாளிகையில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கவாய் உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதி ஆவார். இவர் புத்தமதத்தை சேர்ந்தவர். புத்தமதத்தை சேர்ந்த ஒருவர் இப்போது தான் முதன்முறையாக தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.
வரும் நவம்பர் 23-ம் தேதி(65 வயது) ஓய்வுபெறும் வரை 6 மாதங்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவி வகிப்பார். பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நீதிபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கவாய் பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பளித்தவர்.
