புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் உதவிப்பொறியாளராக பணிபுரிபவர் பாலாஜி. இவர் வயது மூப்பின் காரணமாக ஏப்.30 ம்தேதியுடன்(நேற்று) பணிநிறைவு பெற்றார். இதையடுத்து அவருக்கு துறை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழாநடைபெற்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று மறு பணியமர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உதவி கோட்டப்பொறியாளராக தேனி நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தி்ற்கு நியமித்து திருச்சி கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா உத்தரவிட்டுள்ள தகவல் கிடைத்தது. இதையறிந்த பாலாஜி மகிழ்ச்சி அடைந்தார்.
ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு
- by Authour
