தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது விவசாய சங்க கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தொடர் மழையால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். பழைய நடைமுறையிலேயே கணக்கீடு செய்ய வேண்டும். பாதிப்பு விவரங்களை குறைவாக காண்பிக்க கூடாது. பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிடட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது விவசாயி கண்ணப்பன் என்பவர் தலைக்கீழாக நின்றாலும் நிவாரணம் கிடைப்பதில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக தலைகீழாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

