Skip to content

சொத்து தகராறு…வீடு புகுந்து கத்திகுத்து… 6 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

சொத்து தகராறு… வீடு புகுந்து உறவினருக்கு கத்தி குத்து… 6 பேர் மீது  வழக்கு பதிவு 

திருச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (48. ) இவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம், செல்லமுத்து, கவிதா, அபி, விஜயலட்சுமி மற்றும் மோகன் குமார். இவர்களிடையே சொத்து தகராறு இருந்தது.இந்நிலையில் சம்பவத்தன்று சுந்தர்ராஜ் வீட்டில் இருந்தபோது இந்த ஆறு பேரும் அவரது வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தகராறு செய்தனர். ராஜாராம் அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தினார். மேலும் மற்றவர்கள் அவரை கீழே தள்ளி காயப்படுத்தினர். காயமடைந்த சுந்தர்ராஜ் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது

திருச்சி கே.கே.நகர் மகாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் திவாகர் ( 19 ), மரச்சாமான் செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர்கள் திருச்சி சாமி நகர் அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த கார்த்தி (20) மற்றும் நாகராஜ் (20) ஆவர்.இந்நிலையில் திவாகர் கே.கே.நகர் உடையான் பட்டி அருகே டீ கடையில் நின்று இருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த கார்த்திக் மற்றும் நாகராஜ் அவரிடம் தகராறு ஈடுபட்டு அரிவாளால் கையில் அரிவாளால் வெட்டினர். காயமடைந்த திவாகர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் இது குறித்து கே .கே .நகர் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக், நாகராஜ் ஆகியோரை கைது செய்துசிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.

தங்கும் விடுதி மேலாளர் திடீர் மாயம்

திருச்சியில் தங்கும் விடுதி மேலாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹென்றி மார்ட்டின் (63) நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். மேலும் அவர் அதிக கடன் பெற்றதாக தெரிகிறது இந்த நிலையில் கடந்த மாதம் வேலைக்கு சென்ற ஹென்றி மார்ட்டின் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து எடமலை பட்டிப்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து ஹென்றி மார்டினை தேடி வருகின்றனர்.

 

செம்பு கம்பி திருடிய வாலிபர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( 65 )ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர். இவர் நேற்று வீட்டில் ஏசியை இயக்கியுள்ளார் அப்போது அது சரியாக இயங்கவில்லை. தொடர்ந்து மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் ஏசியில் இருந்த செம்பு கம்பியை திருட முயன்றது தெரிய வந்தது அவரை கையும் களவுமாக பிடித்து ஸ்ரீரங்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப சாலையைச் சேர்ந்த அரவிந்த் குமார் 20 என்பது தெரிந்தது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் விஷம் குடித்து சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிரசன்னா காலனியைச் சேர்ந்தவர் இருதயராஜ் ஜூலியஸ் (34 )இவருக்கும் பானுப்பிரியா என்ற பெண்ணுக்கும் திருமணமானது. குடும்பத்த தகராறு காரணமாக பானுப்பிரியா சென்னையில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இருதயராஜ் ஜூலியஸ் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து எடமலை பட்டிப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு வந்தவர் மயங்கி விழுந்தவர் சாவு

திருச்சியில் மயங்கி மயங்கி விழுந்தவர் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (54). இவர் நேற்று கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்தார் .அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரை, லாட்டரி புகையிலை விற்ற 2 பேர் கைது

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுண் அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி செல்ல முயன்றார் .போலீசார் அவரை துரத்தி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட் வின்சிலி ( 27 ) என்பதும், அங்கு அவர் போதை மாத்திரை மற்றும் வெளிமாநில லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் ஒரு மருந்து ஊசி ஒரு பாட்டில் 19 லாட்டரி டிக்கெட் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கருமண்டபம் ஜே.பி.நகர் அருகே புகையிலை விற்ற கீழ சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த பரத் ( 18 ) என்ற வாலிபரை செசன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து 80 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!