திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று இரவு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதால், தீபம் ஏற்ற அனுமதி அளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்து அமைப்பினர் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் திரண்டுள்ள பாஜகவினர் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மனுதாரரை மட்டுமாவது தீபமேற்ற அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

