கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து
இந்த மனுவின் கடவூர் பஞ்சாயத்தில், அகில இந்திய விவசாய சங்க தொழிலாளர்கள் சார்பாக 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க கோரி யூனியன் கமிஷனரிடம் மனு கொடுக்கும் போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பி.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜு, பி.பழனிவேல் ஒன்றிய செயலாளர், வீரமலை வட்ட குழு உறுப்பினர், மணிமுத்து முன்னிலை வைத்தார். பின்பு மனு கொடுக்கும் போராட்டம், கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து. துவங்கியது. யூனியன் அலுவலகம் முன்பு மக்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வழங்காததை கண்டித்தும், தொடர்ந்து பலமுறை புகார் தெரிவித்தும் ஒன்றிய நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருவதாக கண்டன கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பின்பு 100 நாள் வேலை வழங்க கோரி ஒன்றிய ஆணையர் சுரேஷ்குமார்யிடம்அகில இந்திய விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு வழங் கப்பட்டது.
