Skip to content

தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுடைய இரண்டு வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று நடைபெற்ற முகாமில் இரண்டு வயதிற்கான தடுப்பூசியை போட்டுள்ளனர்.குழந்தையை உறங்க வைத்த நிலையில் குழந்தை எழாததால் இன்று அதிகாலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல்  வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றதைக் கண்டித்து அடுக்கம்பாறை பகுதியில் ஆம்புலன்சை வழிமறித்து குழந்தையின் உடலைக் கேட்டும், தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறியும் இதற்கு உரிய நீதி வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

error: Content is protected !!