திருச்சி , ஸ்ரீரங்கம், அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்டாண்டு காலமாய் வசித்து வருகிறது. அப்பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆதி முத்து மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும்
மணிமாறன் என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு கோயிலுக்கு அருகே உள்ள ஆறு சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் மணிமாறன் அவரது உறவினர்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும்,
இது குறித்து கேட்டால் அதிகாரதோரணையில் தங்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
