Skip to content

புதுச்சேரி பாஜக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 23ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் நிறைவடைகிறது. புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் – பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணியும், திமுக – காங்கிரஸின் கூட்டணியும் அமைந்துள்ளது. கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நிலவி வந்த நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா உடன் முதலமைச்சர் ரங்கசாமி இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினார்.
நீண்ட இழுபறிக்குப் பின் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே நேற்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதில், கூட்டணி உறுதி செய்யப்பட்டு, என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும், அதிமுக மற்றும் ல.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!