புதுக்கோட்டை நகரில் புதுத் தெரு அரசு பால்பண்ணை
எதிரில் உள்ள வெங்கப்பையர் ஊற்று என்ற குளத்தில் சமீரா(7), சவுமியா(10) என்ற இரு சிறுமிகள் குளிக்க வந்தனர். அவர்கள் துணி துவைத்துவிட்டு குளத்தில் இறங்கி குளிக்க முயன்றனர். அப்போது அவர்கள் குளத்தில் மூழ்கினர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் முழ்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சல் போடவே தீயணைப்பு படையினர் வந்தனர். அவர்கள் இரு சிறுமிகளையும் மீட்டனர். அதற்குள் அவர்கள் இறந்து விட்டனர். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.