புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த வாரம் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதாகவும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலெக்டர் ஏன் வடகாடு கிராமத்திற்கு செல்லவில்லை என கேட்டார்.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை கலெக்டர் அருணா இன்று காலை வடகாடு கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்தார்.