புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளமங்கலம் தெற்கு, கருவன் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர ரேசன் கடையினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி, மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), துணைப் பதிவாளர்கள் சதீஸ்குமார் ஆறுமுக பெருமாள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.