Skip to content

புதுகை அரசு போக்குவரத்து கழகத்தில் இலசவ மருத்துவ முகாம்

  • by Authour

புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக மண்டல கிளையில் 36வது சாலை பாதுகாப்பு மாதத்தினை யொட்டி இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்திய மருத்துவ சங்கம், மணிமேகலை மருத்துவ சென்டர்,
ஸ்ரீ கிருஷ்ணா கண் மருத்துவமனை இணைந்து  ,இதனை நடத்தியது.

முகாமினை அரசு போக்குவரத்து கழக புதுகை மண்டல பொது மேலாளர்
கே. முகமது நாசர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
காலை முதல் மாலை வரை நடந்த மருத்துவ முகாமில் ஒட்டுனர்கள், நடத்துனர் கள், அலுவலர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர்.  இந்திய மருத்துவ சங்க புதுகை கிளைத் தலைவர் முகமது சுல்தான், செயலாளர் எம். ராஜா, நிதி செயலாளர் எம். கோபாலகிருஷ்ணன், மணிமேகலை மெடிக்கல் சென்டர் டாக்டர் சாரதாமணி, ஸ்ரீ கிருஷ்ணா கண்மருத்துவமனை  டாக்டர்  எஸ். கோபிநாத், டீம் மருத்துவமனை  தலைவர்  டாக்டர் சலீம், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் த. சுரேஷ் பார்த்திபன் டிக் ரோஸ், உதவி பொறியாளர்
(தொழில்நுட்பம்) சண்முகம், கிளை மேலாளர் பழனிவேல் பங்கேற்றனர்.

error: Content is protected !!