நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இவை அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கியதும் உறுப்பினர்கள் சரமாரி கேள்விகணைகளை தொடுத்தனர். மக்களவையில் பெகல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர். பிரதமர் அவையில் விளக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.
இதனால் சபை அமளியானது. பெகல்காம் தாக்குதல் குறித்து அவையில் விவாதிக்க அரசு தயார் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து கூச்சல் குழப்பமாக இருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அவர் வெளிநடப்பு செய்தார். எதிர்க்கட்சித்லைவரையே அனுமதிக்கவில்லை. எங்களே பேச விட்டால் தானே விவசாதம் நடக்கும். பாஜக எம்.பிக்களை மட்டும் பேச அனுமதிக்கிறார்கள். மக்களவை பிற்பகல் 2 மணி ஒத்திவைக்கப்பட்டது.