Skip to content
Home » மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேரணியை தொடங்கி வைத்தார் .

“வான் மழை நீரை மாசு இல்லாமல் காப்போம் !. தாகம் தீர்க்கும் குடிநீர் ! தரமான குடிநீர் தேக ஆரோக்கியம், காக்கும் நல் மருந்து, மழைநீர் நமது உயிர் நீர் என சூளூரைப்போம்! அதனை மனதில் செதுக்குவோம்|மரம் வளர்போம் மழை நீ சேகரிப்போம்!. நீரினால் பரவும் நோய் இனி இல்லை என்போம்! என்ற மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி

நடைபெற்றது. இப்பேரணியானது; மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு அரங்கு வரை சென்றது. இப்பேரணியில் 100 மேற்பட்ட மாணவ. மாணவியர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர், மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் கோட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி, ஊராட்சி ஆகிய அலுவலகங்களில் நியாய விலைக்கடை மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் கொண்டு விளம்பரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மிண்ணனு விடியோ வாகனம் மூலம் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!