கரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி. மாவட்ட ஆட்சியர்.தங்கவேல் கொடியாசித்து துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பேரணி தொடங்கப்பட்டு அரசு கலைக்கல்லூரி வரை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மழைநீரைச் சேகரித்து, முறையாகச்

சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்தலாம். விவசாயம்: நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.
நிலத்தடி நீர் உயர்வு: மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதைத் தடுக்கவும், வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது. விழிப்புணர் பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரங்கள் வழங்கி மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர் பேரணியில்
தமிழ்நாடு குடிநீர் வடிகள் வாரிய மாவட்ட அலுவலர்
அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

