Skip to content

ரஜினி அண்ணனுக்கு மாரடைப்பு

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் ரஜினி பெங்களூரு வந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருவுக்கு புறப்பட்டு, சகோதரரை நேரில் சந்தித்துள்ளார். ரஜினியின் சினிமா வாழ்க்கையை உருவாக்க முக்கிய பங்கு வகித்தவரான சத்யநாராயணாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

error: Content is protected !!