Skip to content

மீண்டும் இணையும் ரஜினி-கமல்… ரசிகர்கள் உற்சாகம்

  • by Authour
ரஜினி  மற்றும் கமல் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில் நடிகர் கமல் பேசும்போது தான் ரஜினியுடன் இணைவதை உறுதி செய்து இருக்கிறார். அது தரமான சம்பவம் என சிலர் சொல்வது பற்றி பேசிய கமல் “படம் கொடுக்கிறோம், அதை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். அதற்கு முன்பே தரமான சம்பவம் என சொன்னால் எப்படி. திடீர்னு தரதரனு கூட இழுத்துடுவோம்.”
உங்களுக்கு படம் பிடித்தால் மகிழ்ச்சி, பிடிக்கவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்வோம். நாங்கள் இணைகிறோம். எங்களுக்குள் போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்தியது தான். ஆனால் எங்களுக்கு அது போட்டி கிடையாது” எனவும் கமல் தெரிவித்து இருக்கிறார்.
தனது அடுத்த படத்தில் ரஜினி உடன் இணைந்து நடிப்பதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். விருது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்தியது ரசிகர்கள்தான் எனவும், தங்களுக்குள் போட்டியே கிடையாது என்றும் கூறினார். முன்னதாக, ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
error: Content is protected !!