தமிழ்நாட்டில் 6 எம்.பிக்களை தேர்வு செய்வதற்கான ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19ல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு விட்டது. அதிமுக சார்பில் 2 பேர் போட்டியிடலாம் என்ற நியைில் அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாநிலங்களவை தேர்தல் குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்படும். இந்த கூட்டத்தில் சீட் கேட்கும் தேமுதிகவின் கோரிக்கை குறித்தும் பரிசீலிக்கப்படும் என அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதயகுமார் தெரிவித்தார்.
