தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணத்தில் நடைபெற்றது இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி:
எனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம். எனது பெயரை பயன்படுத்த கூடாது என தெரிவித்தார்.
அன்புமணி தனது பெயருக்கு பின்னால் அன்புமணி ராமதாஸ் என போடுகிறார். இதனை பெயர் சொல்லாமல் மறைமுகமாக கூறினார்.
உங்கள் கூட்டத்தில் அன்புமணி புகைப்படம் இடம்பெற்றுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலினின் பாசம் விடமில்லை என்றார்.
இரண்டாக உள்ள பாமக தலைமை ஒன்றாக இணைந்தால் கண்ணுக்கு நன்றாக இருக்கும் என எச் ராஜா தெரிவித்துள்ளாnu என கேட்டதற்கு , அது அவரது ஆசை என்றார்.
அந்த ஆசை நிறைவேறுமா? என மீண்டும் கேட்டதற்கு போகப் போகத் தெரியும் என பாட்டு பாடினார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என கேட்டதற்கு அதற்கும் போகப் போக தெரியும் என பாட்டு பாடி பேட்டியை நிறைவு செய்தார்.
முன்னதாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அரசு பருத்திக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் கும்பகோணம் மாவட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அடுத்த மாதம் பத்தாம் தேதி பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநாடு நடைபெறுகிறது இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
தந்தை மகன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின் மருத்துவர் ராமதாஸ் வெளி இடத்தில் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.