திருத்தணி, திருவள்ளூர் ரயில்வே ஸ்டேசனில் ரீல்ஸ் எடுத்ததை தட்டிக்கேட்ட வட மாநில வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 சிறார்கள். தனது கழுத்தில் கத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்ததை தட்டி கேட்ட வடமாநில இளைஞரின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை அவர்களே தன் இன்ஸ்டாவில் வீடியோ எடுத்து அப்லோடு செய்திருக்கிறார்கள். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே வடமாநில நபரை அரிவாளால் தாக்கி ரீல்ஸ் எடுத்த 4 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 சிறார்கள் செங்கல்பட்டு பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு சிறுவரை கண்டித்து பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

