Skip to content

சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை, திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக இருவழி பாதையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், வாகன பயன்பாடு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நேர்ந்தது.

பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, தமிழக முதலமைச்சர் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி மதிப்பீட்டில் நடுக்குத்தகை முதல் வெங்கல், அம்மனம்பாக்கம் வரை இரு வழிச் சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த ஆண்டு முடிந்து மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், திருநின்றவூர் நகராட்சி, நடுக்குத்தகை ஊராட்சி பகுதிகளுக்கு இடையே 500 மீ., தூரத்துக்கு கிடப்பில் உள்ள சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலைத்துறை விரைவில் தொடங்க உள்ளது. இந்த பணிக்காக திருநின்றவூர் நடுக்குத்தகை பகுதியில், சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள், கடை முன் அமைக்கப்பட்டிருந்த ஷெட் உள்ளிட்ட 40 ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க திருநின்றவூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!