திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் மாயமான வெல்டர் பிணமாக கிணற்றில் மீட்பு உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை
திருச்சி முதலியார்சத்திரம். குட்செட் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (57). இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும். இரண்டு பெண் மற்றும் ஒரு மகன் உள்ளார். குட்செட் ரோட்டில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடிய குடும்பத்தினர் இது குறித்து திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் இரவு நேரம் ஆனதாலும் கிணற்றில் அதிக தண்ணீர் இருந்ததாலும் உடலை மீட்க முடியாததால். இன்று காலை தீயணைப்பு துறை அதிகாரி சத்தியமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த தண்ணீரை அப்புறப்படுத்தி பின்னர் கிணற்றில் இறங்கி இறந்த நல்ல தம்பி உடலை மீட்டனர். அவரது உடல் கைப்பற்றிய பாலக்கரை காவல்துறையினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாலக்கரை காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா அல்லது வேறு காரணம் உண்டா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.