Skip to content

வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்- ஓய்வு ஊழியர்கள் கோரிக்கை

அரசு ஓய்வூதியர் சம்மேளன அகில இந்திய 2வது மாநாடு ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் கடந்த 22 மற்றும்23ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் வாலிடேஷன் சட்டம் 2025 ரத்து செய்து அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 31 .12 .2025க்கு முன்னர் ஓய்வு பெற்றோர்களுக்கு 8வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். கமுட்டேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பிரயாண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து ஓய்வூதியர்களுக்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் முனைவர் கிருஷ்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் பேசினர். அகில இந்திய சம்மேளன தலைவராக சுரேந்தர் சவுத்ரி, (பீகார்) பொதுக செயலாளராக வாசீர்சிங் (ஹரியானா ) உதவி பொதுச் செயலாளராக கிருஷ்ணமூர்த்தி (தமிழ்நாடு) நிதி செயலாளராக அருணாகோஷ் (மேற்கு வங்கம்) துணைத் தலைவராக ஜெயச்சந்திரன் (தமிழ்நாடு) செயற்குழு உறுப்பினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அரங்கநாதன் (கோவை) இளமாறன் (சென்னை) சங்கரி (தென்காசி) செந்தமிழ் செல்வன் (திருச்சி) ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் 15 மாநில சங்கங்களில் இருந்து சுமார் 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!