தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981–1982 ம் ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் மலைக்கோட்டை மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி ஐந்தாம் ஆண்டாக திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற போலீசாரின் மனைவிகள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி, சென்னை, கன்னியாகுமரி, விழுப்புரம், மதுரை, கோவை, கேராள, பாண்டிச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களின் பழைய கால காவல்துறையில் பணியாற்றிய போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மலைக்கோட்டை மலரும் நினைவுகள் குழு தலைவர் ராஜு, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முத்துசாமி, உதவி செயலாளர் பொன்மலை இளங்கோவன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்கள் வேதமூர்த்தி,இளங்கோவன்,சந்திரன், பிரான்சிஸ், ராமானுஜம்,சாமிநாதன், ஜோசப் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் உயரதிகாரிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக. காவல்துறையில் பணி ஓய்வு பெற்று இறந்து போன போலீசாருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

