திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த எஸ் எஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (60) ஓய்வு பெற்ற ஆசிரியர் இவரும் இவருடைய மனைவியான மகேஸ்வரி ஆகிய இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொடுத்துள்ள தனது மகளை காண கடந்த 27 ம் தேதி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் சென்ற 2 நாட்களில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா செயல்படாமல் இருந்துள்ளது. கரண்ட் ஆஃப் ஆகி இருக்கும் என்று நம்பிய தம்பதியினர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள இல்லை என தெரிகிறது.
பின்னர் சுமார் 15 நாட்களாக சிசிடிவி காட்சிகள் செயல்படாத காரணத்தால் சந்தேகம் அடைந்த ஓய்வு

பெற்ற ஆசிரியர் ராமமூர்த்தி இது குறித்து தனது அண்ணன் மகனான மோகன் என்பவரிடம் வீட்டில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை என்ன நடக்கிறது என்று சென்று பார் என்று கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் மேல் மாடியில் முன் கதவு இரும்புராடல் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.
பின்னர் இது குறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ராமமூர்த்தி மகளைப் பார்க்க சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்று சவரன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் மேலும் சிசிடிவியின் ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர்.
மேலும் மர்ம நபர்கள் எப்போது வீட்டிற்குள் நுழைந்தார்கள் எப்போது திருடப்பட்டது என்பதே தெரியாமல் வீட்டின் உரிமையாளர்கள் இருந்துள்ளனர் . மேலும் சிசிடிவி கேமரா பழுதானதால் காரணமாகவே சந்தேகத்தின் பெயரில் ராமமூர்த்தி தன்னுடைய அண்ணன் மகன் ஆன மோகனை வீட்டிற்கு அனுப்பி சோதனை செய்ய சொன்னது குறிப்பிடத்தக்கது.

