தஞ்சை அருகே உள்ள ஏழு பட்டி கிராமம்நடுத் தெருவை சேர்ந்தவர் குறுந்தையன் அப்பா பெயர் பாலையன் . குறுந்தையன் இன்று காலை திருக்கானூர் பட்டி நாலு ரோட்டில் தனது இரு சக்கர வாகனத்தில் தனது சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்த ஒத்த கை ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மகேந்திரா சைலோ காரை விட்டு குறுந்தையன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழ செய்து அவரை தலை,கை,கால் போன்ற இடங்களில் அரிவாளால் வெட்டினர் .
இதில் பலத்த காயம் அடைந்த குறுந்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய உடல் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில் குறுந்தையன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக காவல் சரகத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ரவுடி ஆவார். இவர் கடந்த 2013 ம் வருடம் உலகநாதன் என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
மேலும் 2014 ம் வருடம் உதயா என்பவரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இந்த கொலைகளுக்கு பதிலுக்கு பதில் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கண்ட கொலை சம்பவம் நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கொலையாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.