சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் நகரில் இருந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக ராய்ப்பூர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் தாம்தரி மாவட்டம், காப்ரி பைபாஸ் பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த கார் ஒன்றின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் மற்றும் வீரர்கள் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சைக்காகச் செல்லும் வழியிலேயே மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மொத்தம் இந்த விபத்தில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் காரின் ஓட்டுநர் என 4 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த மற்றொருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

