*நோ பார்க்கிங் வாகன நிறுத்தினால் அபராதம் விதிக்கும் காவல் துறை – சாலையை மறைத்து கடை அமைத்து வியாபாரம் செய்யும் இவர்களுக்கு மட்டும் எப்படி ? அனுமதி என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் …*
கோவை, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, டவுன்ஹால், கிராஸ் கட், போன்ற பகுதிகளில் ஜவுளிகள் நகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கோவை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மக்களின் கூட்டம் அலைமோதும்.
இதனால் இந்த பகுதிகள் எப்போதும் மக்கள் கூட்டம் மற்றும் வாகன நெருக்கத்தால் நிரம்பி வழியும். எனவே இந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்கு போக்குவரத்து போலீசாருக்கு சவாலாக இருக்கும்.
இந்த நிலையில் பெரிய கடைவீதி செல்லும் பாதையில் உள்ள பள்ளிவாசலுக்கு முன்புறம் மற்றும் பின்புறத்தில் பிளாட்பாரத்தில் சாலையோரம் கடைகள் அமைத்து சிறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இது அந்த பகுதியில் ஏற்கனவே நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அங்கு ஒருவர் சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடை போட்டு உள்ளார்.
இந்த கடையில், கைப் பைகளை விற்பனை செய்து வருகிறார். இந்த தள்ளு வண்டியால் அந்தப் பாதையில் ஆட்டோ, கார், வண்டி, வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
“நோ பார்க்கிங்” பகுதியில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு அபராத விதிக்கும் காவல் துறையினர் பெரிய கடை வீதி சாலையில் நடுவே தள்ளுவண்டியிள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி அளிப்பது எப்படி ? என்று பாதசாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் பண்டிகை காலம் நெருங்குவதால் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் . இதனால் சாலையின் நடுவே பெரும் பகுதியை மறைத்து தள்ளுவண்டி கடையை அங்கு இருந்து அகற்ற வேண்டும் என கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
உடனடியாக அங்கு இருந்து அந்த கடையை அகற்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, பொதுமக்களின் தாமதமின்றி கடந்து செல்ல முடியும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.