Skip to content

விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஜெய நிர்மலா,துணை ஆணையர் பாலு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை ஆணையர் பாலு பேசும்போது, திருச்சி மாநகராட்சியில் 20 வால் பல்புகள் அனைத்தும் 40 வால்ட் பல்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் ரூபாய் 154 கோடியே 34 லட்சத்துக்கு சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

கவுன்சிலர் ரமேஷ் (திமுக ) :

நாய் கருத்தடை மையங்களில் எந்தப் பணிகளும் நடக்கவில்லை. நாய் பிடிப்பதை விட்டு விட்டு ஊழியர்கள் ஏ.சி அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சுரேஷ் சிபிஐ :

எனது பாடல் சுகாதார அலுவலகம் கட்டப்படவில்லை. சாலைகள் சீர்குலைந்து காணப்படுகின்றன.

மேயர் அன்பழகன் :

இந்த மாதத்தில் சுகாதார அலுவலகம் கட்டி முடிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு முன்பாக சாலைப் பணிகளை முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் .அந்த வகையில் மாநகராட்சியிலும்
சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.தேர்தலுக்குப் முன்பாக திருச்சியிலும் அனைத்து சாலைப் பணிகளும் முடிக்கப்படும்.

அரவிந்தன் (அதிமுக ) :

டபிள்யூ பி.
ரோடு பகுதியில் வடிகால் பாலம் போடப்படாமல் உள்ளது.
அதனை தூர்வார வேண்டும்.
பர்மா பஜாரில் உள்ள 95 தரைக்கடை வியாபாரிகளுக்கு யானை குளத்தில் 95 எண்ணிக்கையில் ஒரே அளவில் கடைகள் அமைத்துக் கொடுப்பதாக. இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்.எஸ்.பி சாலையில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு எங்கே இடம் ஒதுக்கப்படும்?

மேயர் அன்பழகன்;-

கலந்து பேசி யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கடைகள் ஒதுக்கப்படும்.

ந..பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :

காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி
உரிமம் ரத்து செய்யப்பட்ட போதிலும், அங்கு சாலையில் வாழைத்தார்களை குவித்துவைக்கிறார்கள்.லாரிகளை நிறுத்துகிறார்கள்.இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மேயர் அன்பழகன்
அவர்களுக்கு இப்போது இடமில்லாததால் அங்கு செயல்படுகிறார்கள். ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பஞ்சப்பூர் காய்கறி மார்க்கெட் கட்டி முடித்தவுடன் அங்கு செல்வதாக கூறியுள்ளார்கள்.

கோ.கு. அம்பிகாபதி
(அதிமுக ) :

திருச்சி – புதுக்கோட்டை சாலையில்
மொராய்ஸ் சிட்டி பகுதியில் சென்டர் மீடியனில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை எனவே சென்டர் மீடியனில் புதிய மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
எனது வார்டுக்கு உட்பட்ட செம்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 18 சென்ட் மயான பூமி தாசில்தார் மூலமாக மீட்கப்பட்டது. இப்போது மீண்டும் அதை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள்.
ஆகவே மாநகராட்சி
நிதி ஒதுக்கப்பட்டு
வேலி அமைத்து அதை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஜாமலை விஜி :
(திமுக )

எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை பல கூட்டங்களில் பேசிய பின்னரும் எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மேயருக்கு வானளாவிய அதிகாரம் இருந்தும் அதிகாரிகள் வேலை செய்யாமல் இருக்கிறார்கள். இதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றால்இந்த அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் .
இதனால் மேயருக்கும் காஜாமலை விதிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பைஸ் அகமது;- (மமக):

மழைக்காலத்துக்கு முன்பாக தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் பகுதி மற்றும் அண்ணாநகர் பகுதியில் மழை நீர் வடிகால்களை தூர்வாரி கல்வெட்டு அமைக்க வேண்டும்.

கவுன்சிலர் நாகராஜ் : (திமுக)

எனது வார்டில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவில்லை.
பில் வராததால் பணிகள் செய்ய இயலவில்லை என காண்ட்ராக்டர் சொல்கிறார்.

மேயர் அன்பழகன் : பில் தொகை வந்துவிட்டது. பணிகள் சுணக்கமில்லாமல் நடக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது. தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினார்.முடிவில் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!