Skip to content

உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு

கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த கூலி நாயக்கனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கிராமத்திற்குள் முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன் கொள்ளையர்கள் சுற்றித் திரிந்துள்ளனர்.

மேலும், அக்கிராமத்தில் உள்ள மாரப்பன் (50) என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி வனிதாவின் (38) 5 1/2 பவுன் தாலி செயினை திருடிச் சென்றுள்ளனர். அப்போது, அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் விநோதமான உடையில் சுற்றித் திரிவது பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இது தொடர்பான சிசி டிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு இதே போன்ற தோற்றத்தில் புலியூர், வெள்ளாளபட்டியில் 2 மர்ம நபர்கள் 4 வீடுகளில் திருட முற்பட்ட போது, பொதுமக்கள் போட்ட சத்தத்தில் தப்பிச் சென்ற சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து இது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதால் கிராமத்தில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், முகமூடி கொள்ளையர்களை பிடிக்க அரவக்குறிச்சி ஆய்வாளர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!