திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த வெக்கல்நத்தம் பகுதியில் உள்ள சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு நபர்கள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அதுபோல அங்கு கடை வைத்து நடத்தி வரும் சுரேஷ் என்பவர் பேக்கரி கடையில் ஆயிரம் ரூபாய் பணம், அதேபோல
மூர்த்தி என்பவரின் ஜவுளி கடையில் ஐந்தரை சவரன் நகை மற்றும் பத்தாயிரம் பணம், ரமேஷ் என்பவரின் மெடிக்கல் கடையில் 35 ஆயிரம் பணம், கோவிந்தசாமி டீக்கடையில் 500 ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள், பிரபாகரன் பேக்கரி கடையில் 7000 பணம், தேவயானி பூக்கடையில் 500 ரூபாய் பணம், செல்வியின் டீக்கடையில் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் முகமுடி அணிந்து கொண்டு நேற்று இரவு கடைகளின் பூட்டை உடைத்து நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதேபோல மற்றும் ஜெயபால் வளையல் கடை மற்றும் கோவிந்தராஜ் காய் கடை ஆகிய இருவரின் கடையை உடைத்து கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர் ஆனால் அங்கு ஏதும் இல்லாத காரணத்தால் அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் வழக்கம்போல இன்று காலை வந்து கடையை திறக்க முற்படும்போது கடை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகின்றது எனவே இரவு நேரங்களில் நாட்றம்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இப்பகுதிகளில் தொடர் கொள்ளை நடைபெற்று வருவதால் நாட்றம்பள்ளி போலீசார் இரவு நேரங்களில் என்ன செய்கிறது எனவே பொதுமக்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 9 கடைகளில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது