வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியிடம் போலீசார் விசாரணை
தென்னூர் பிஷப் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (56 )இவர் தில்லைநகர் குப்பன்குளம் அருகே நின்ற போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 500 பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார் இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான வீரப்பன் என்கிற ராஜ்குமார் (24) என்ற வாலிபரை பிடித்து விசாரிக்கின்றனர்
மனைவியுடன் தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரீரங்கம் மொட்ட கோபுரம் நெல்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (26) இவருக்கும் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது இந்த நிலையில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நாராயணசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருச்சி மத்திய சிறை கைதி திடீர் சாவு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் 50. இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்த குற்றத்திற்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் . மேலும் இவர் காச நோயால் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. இந்த நிலையில் இவருக்கு திடீரென மூச்சுத் திறனறல் ஏற்பட்டது இதனால் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த வாலிபர் பரிதாப சாவு
திருச்சி வயர்லெஸ் சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஷேக்கர் (59 ) .இவரது மகன் கிரிதரன் ( 21 ) இவர் கடந்த ஏர்போர்ட் தென்றல் நகர் சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றார் அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்தார் . அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
எடமலைப்பட்டி புதூர், இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் 25 இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செய்த குற்றத்திற்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறையினுள் கஞ்சா பயன்பாடு இருப்பதாக தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர் இதில் கைதி முருகன் இடத்தில் 3 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது அதை சிறை துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறைதுறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.