காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். சினிமாவிலும் காமெடி நடிகராக உயர்ந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். இதையடுத்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த சில தினங்களாக உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், நேற்று இரவு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அறிந்த நடிகர் தனுஷ் உடனடியாக நள்ளிரவே அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின், அங்கிருந்த மகள் இந்திரஜா சங்கருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். தந்தை மறைவால் இந்திரஜா தனுஷ் தோளில் சாய்ந்து கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. ரோபோ ஷங்கர் தனது மகள் மீது எல்லையற்ற பாசம் கொண்டிருந்தார்.
