உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 9-ஆம் தேதி நாகேந்திரன் உயிரிழந்த நிலையில் 11- ஆம் தேதி உடற்கராய்வு செய்யப்பட்டது. சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு இருந்த நிலையில், ரவுடி நாகேந்திரன் இன்று காலை உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வியாசர்பாடி உள்ள அவரது வீட்டிற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வீட்டில் அஞ்சலி செலுத்திய பின்னர் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள மயானத்தில் நாகேந்திரன் உடல் புதைக்கப்பட உள்ளது. மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 எதிரியாக இருந்தவர் நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை நாகேந்திரன் உயிரிழந்துள்ள நிலையில் அவரது மகன் சிறையில் இருந்த அஸ்வத்தமன் தற்பொழுது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வதற்காக பரோலில் வந்துள்ளார். இதனிடையே உடல்நலக்குறைவால் உயிரிழந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பாக அவரத் இரண்டாவது மகன் அஜித் ராஜா திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நாகேந்திரன் உடல் முன்பு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.