ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்!. அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி. உதயகுமார் தயார் மீனாள் அம்மாள் (74) உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆர்பி.உதயகுமாருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
