Skip to content

இளைஞர்களிடமிருந்து ரூ. 3.37 லட்சம் திருட்டு: 3 போலீசார் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் யாத்ரி போலீஸ் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் அனில் குமார்.  மேலும், அப்துல் மறும் மஜித் ஆகியோர் போலீஸ் கான்ஸ்டபிள்களாக பணியாற்றி வந்தனர். இதனிடையே, போலீசார் 3 பேரும் கடந்த 15ம் தேதி மாலை யாத்ரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு காரில் வந்த 3 இளைஞர்களை இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் 3.37 லட்ச ரூபாய் பணம் இருந்தது அதை திருட திட்டம் தீட்டினர். அதன்படி, 3 இளைஞர்களையும் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அழைத்து சென்று  3 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு 3.37 லட்ச ரூபாய் பணத்தையும் திருடி சென்றனர்.

போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த 3 இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். சிகிச்சைக்குப்பின் பணத்தை போலீசார் திருடியது தொடர்பாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், இளைஞர்களிடமிருந்து பணத்தை திருடிய யாத்ரி போலீஸ் நிலைய போலீசார் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்தனர். மேலும், பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!