கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 5,87,790 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன் தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் ,கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியில்

பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த இரண்டு நாட்களில் மாவட்டத்தில் 5,87,790 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

