மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசியால் கைவிடப்பட்ட எண்ணெய் கிணற்றிலிருந்து மீண்டும் ஆயில் எடுப்பதை தடுக்கக் கோரி போராட்டம் நடத்திய மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் கடந்த 15ஆம் தேதி சாலைமறியல் நடத்தினர். உடனடியாக பணிகளை நிறுத்திவிட்டு ஆர்டிஓ அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தேரிழந்தூரில் எண்ணெய் எரிவாயு கிணறு கைவிடப்பட்ட நிலையிலும் தற்பொழுது எரிவாயு அழுத்தம் காரணமாக ஆயில் வெளியேறுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் கூறியது. ஆர்டிஓ தலைமையில் தேரிழந்தூர் ஓஎன்ஜிசியை ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு போராட்டகாரர்கள் தரப்பில், கைவிடப்பட்ட எண்ணெய் கிணற்றிலிருந்து மீண்டும் ஆயில் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாக வேலை பார்க்கிறது என்றும் ஆயில் கிடைத்தாலும் தேரிழந்தூர் எண்ணெய்க்கிணறு மூடப்படவேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என தெரிவித்துள்ளனர்.
