Skip to content

ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே, திண்டா நகரத்தை நோக்கி சென்ற ஒரு சிறிய ரக  பயணிகள் விமானம் திடீரென ராடாரிலிருந்து காணாமல் போனது. இந்த விமானம், அங்காரா ஏர்லைன்ஸ்விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த ஆன்டோநோவ் அவ் வகையைச் சேர்ந்தது. இதில் 43 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 6 விமான ஊழியர்கள், மொத்தம் 54பேர்   பயணம் செய்துள்ளனர்.

திண்டா விமான நிலையத்தை நெருங்கும் வேளையில், விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன்  விமானத்துக்கான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனுடன், ராடாரிலிருந்தும் அது மறைந்துவிட்டது. சம்பவம் உறுதியானதும், ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டன.
1 மணி நேர தேடுதலுக்கு பிறகு  விமானம்  நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

அமூர் மாகாணம்,  ரஷ்யாவில்  மிகவும் கடுமையான இயற்கை சூழல்களைக் கொண்ட பகுதி என கூறப்படுகிறது. இங்கு அதிகமான காடுகள், மலைகள், மற்றும் சராசரி தீவிரமான வானிலை நிலவும். எனவே, விமானத்தை தேட   தொழில்நுட்ப உதவிகளுடன் கூடிய பெரும் குழுக்கள் தேடல் பணிகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் மற்றும் நிலத்தில் சென்று தேடும் குழுக்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு,  விமானத்தின் நொறுங்கிய பாகங்களை தேடி கண்டுபிடித்தனர்.

அந்த விமானம் சோவியத்தில  வடிவமைக்கப்பட்ட ஏஎன்-24 எனப்படும் பழைய வகை விமானம். இது குறுகிய தூரத்திற்கு பயணிக்க வடிவமைக்கப்பட்ட விமானமாகும். தற்போதும் சில பகுதிகளில் மட்டும் இவ்வகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதுவரை நிகழ்ந்த பல விபத்துகள் காரணமாக, இந்த வகை விமானத்தின் பாதுகாப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. விபத்துக்குள்ளான விமானம் டர்போப்ராப் வகையை சேர்ந்தது. இது அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் என்பதால்  பெரும்பாலும் இவை  தொலை தூரத்துக்கு இயக்கப் படவில்லை.
error: Content is protected !!