Skip to content

”சாகுந்தலம்” குறித்து கடினமான தருணங்களை பகிர்ந்த சமந்தா….

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா,  குணசேகரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’.  புராண காதல் காவியமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 9-ஆம் தேதி மதியம் 12.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

samantha

காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான டப்பிங்கை தற்போது கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களை நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். அதில் இந்த படத்தில் நடக்கும் போதும், பேசும் போதும், ஓடும்போதும், ஏன் அழும் போதும் கூட ஒரு நயத்தையும், தோரணையும் கடைப்பிடிப்பது கடினமாக இருந்தது. இதற்காக சில பயிற்சிகளை மேற்கொண்டேன் என்று கூறினார். அதோடு பயிற்சி எடுத்த ஒரு புகைப்படத்தையும் சமந்தா வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!