Skip to content

வைகோவின் சமத்துவ நடை பயணம்… நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தென்னூர் உழவர் சந்தை வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.அப்போது அவர் வரும் சாலையில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்களை சந்திக்கிறார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி விமான நிலையம் முதல் குட்செட் மேம்பாலம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மேற்கு மாநகர திமுக சார்பில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் குட்ஷெட் மேம்பாலத்திலிருந்து தென்னூர் அண்ணாநகர் செல்லும் சாலை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
சாலையின் ஓரம் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வரை வரவேற்க தெற்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ரோடுஷோ மூலம் சாலையில் நின்று வரவேற்பு அளிக்கும் மக்களை சந்திக்கிறார்.
பின்னர், உழவர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்குச் சென்று வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்வில், மாநில, மாவட்ட, மாநகர கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி,ஒன்றிய, நகர, பேரூர் ,வட்ட,வார்டு,கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் வைரமணி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது நடைபயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது. முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமத்துவ நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
சமத்துவ நடை பயணம் தொடக்க விழாவிற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பேசுகிறார்.
ம.. தி.மு.க. முதன்மைச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வரவேற்று பேசுகிறார்.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்து பேசுகிறார்.
இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன்,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி,திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். மதிமுக நிர்வாகிகள்
ஆடிட்டர் அர்ஜுன்ராஜ்,டாக்டர் ரொகையா,செஞ்சி மணி,ஆடுதுறை முருகன்,தி.மு. ராஜேந்திரன்,வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம்,டி.டி.சி.சேரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுள்ளன.
விழா மேடை அமைப்பு மற்றும் நடைபயண ஏற்பாடு பணிகளை ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க. உயர்நிலை குழு உறுப்பினர் ஜீவன், மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம்,பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், ஏர்போர்ட் வினோத், ஜங்ஷன் செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சமத்துவ நடைபயண ஏற்பாடுகளை துரை வைகோ எம்.பி ஆய்வு செய்தபோது எடுத்த படம். அருகில் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!